எசேக்கியேல் 28:13-17 - WCV
13
கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய்! விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின! பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருப்பாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன.
14
காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்: கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்: ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.
15
நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய்.
16
பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்: பாவம் செய்தாய் நீயே! எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்: ஓ! காவல்காக்கும் கெருபே! உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன்.
17
உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது: உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்: எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்: மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.