3
கலக வீட்டாருக்கு உவமை ஒன்றின் வழியாக எடுத்துக்கூறு: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கொப்பரை ஒன்றை எடுத்து வை: தண்ணீரை அதில் ஊற்று.
4
உள்ளே இறைச்சித் துண்டுகளைப் போடு: தொடை, தோள்பகுதி ஆகிய நல்ல பாகங்களைப் போடு: பொறுக்கியெடுத்த எலும்புகளால் நிரப்பு.
5
மந்தையில் சிறந்ததைக் கொண்டுவா: விறகுக்கட்டைகளை அதன்கீழ் அடுக்கு: இறைச்சித் துண்டுகளை வேகவை: எலும்புகளும் உள்ளிருக்கட்டும்.
6
ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: குருதியைச் சிந்தும் நகருக்கு ஐயோ கேடு! துருப்பிடித்த கொப்பரை இது: இதன் துரு நீங்கவே இல்லை: ஒவ்வொரு துண்டாய் அதிலிருந்து எடு: தேர்வு செய்து எடுக்க வேண்டாம்.
7
ஏனெனில், அவள் சிந்திய குருதி அவள் நடுவில் உள்ளது: வெறுமையான பாறையில் அதை ஊற்றினாள்: புழுதியில் மறையும்படித் தரையில் அதை ஊற்றவில்லை.
8
சினத்தைக் கிளறவும் பழிவாங்கவுமே புழுதியில் அதை மறைக்காது வெறுமையான பாறையில் ஊற்றச் செய்தேன்.
9
எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: குருதி சிந்திய நகருக்கு ஐயோ கேடு! விறகுகளை நானும் உயரமாய் அடுக்குவேன்.
10
எனவே விறகுக் கட்டைகளை மிகுதியாக அடுக்கு: நெருப்பு மூட்டி இறைச்சியை நன்கு வேகவை: நறுமணப் பொருள்களையும் கலந்துவிடு: எலும்புகளும் கரியட்டும்.
11
பின்னர், வெறுமையான கொப்பரையை நெருப்புக் கட்டைகள் மேல் வை: களிம்பு காய்ந்து உருகும்வரை அது சூடேறட்டும்: அதன் அழுக்கு கரைந்து போகட்டும்: அதைப் பிடித்திருந்த துருவும் நீங்கட்டும்.