5
ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள். அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.
6
அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும் அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும் குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.
7
அவள் அசீரியர்களில் தலைசிறந்த அனைவருடனும் வேசித்தொழில் செய்தாள்: தான் காமுற்ற அனைவரின் சிலைகளாலும் தீட்டுப்பட்டாள்.
8
எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை. அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்: அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்: தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.
9
எனவே அவள் காமுற்ற அவளின் காதலர்களாகிய அந்த அசீரியர் கைகளிலேயே அவளை விட்டுவிட்டேன்.
10
அவர்கள் அவளின் ஆடைகளை உரிந்து, அவளின் ஆண்மக்களையும் பெண்மக்களையும் கவர்ந்து கொண்டு, அவளை வாளால் கொன்று போட்டனர். பெண்களுக்குள் அவள் இழி சொல் ஆனாள். இவ்வாறு அவர்கள் அவள்மீது தண்டனையை நிறைவேற்றினர்.
11
அவள் தங்கை ஒகலிபா இதையெல்லாம் கண்டாள். இருப்பினும் தன் தமக்கையைவிடக் காமத்திலும் வேசித்தனத்திலும் இழிந்தவளானாள்.