எசேக்கியேல் 23:4-8 - WCV
4
அவர்களில் மூத்தவள் பெயர் ஒகோலா: இளையவள் பெயர் ஒகலிபா. எனக்கு உரியவர்களாகிய அவர்கள் ஆண்மக்களையும் பெண்மக்களையும் பெற்றெடுத்தனர். ஒகோலா என்பவள் சமாரியா, ஒகலிபா என்பவள் எருசலேம்.
5
ஒகோலா என்னுடையவளாயிருக்கையிலேயே வேசித்தொழில் செய்தாள். அவள் தன் காதலர்களாகிய அசீரியர்மேல் காமம் கொண்டாள்.
6
அவர்கள் நீல ஆடை உடுத்திய போர் வீரர்களும் அழகிய இளைஞர்களாகிய ஆளுநர்களும் அதிகாரிகளும் குதிரையேறிய வீரர்களுமாய் இருந்தனர்.
7
அவள் அசீரியர்களில் தலைசிறந்த அனைவருடனும் வேசித்தொழில் செய்தாள்: தான் காமுற்ற அனைவரின் சிலைகளாலும் தீட்டுப்பட்டாள்.
8
எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை. அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்: அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்: தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.