32
தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் தமக்கை குடித்த கிண்ணத்தில் நீயும் குடிப்பாய்: அகன்று, குழிந்து நிறைந்திருப்பது அக்கிண்ணம்: நிந்தைக்கும் பழிச்சொல்லுக்கும் நீ ஆளாவாய்.
33
குடிவெறியாலும் துயரத்தாலும் நிறைந்திருப்பாய்! உம் தமக்கை சமாரியாவின் கிண்ணம் துயரமும் அழிவும் கொண்ட கிண்ணம்!
34
குடிப்பாய்: அதை நீ குடித்து முடிப்பாய்! அதனை உடைத்தெறிவாய் துண்டுகளாய்! உன் மாhபுகளைக் கீறிக்கொள்வாய்! நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.