5
ஆண்டவராகிய நானே என் வாளை உறையினின்று உருவியுள்ளேன். இனி அது மீண்டும் உறைக்குள் இடப்படாது என்பதை அனைவரும் அப்போது அறிந்து கொள்வர்.
6
மானிடா! நீயோ பெருமூச்சுவிட்டு அழு: உடைந்த உள்ளத்தோடும் மனக்கசப்போடும் அவர்கள் கண்முன் பெருமூச்செறித்து அழு!
7
“ஏன் பெருமூச்செறிந்து அழுகிறாய்?” என்று அவர்கள் உன்னைக் கேட்பார்கள். அப்போது நீ சொல்: வரப்போவரை நான் கேள்விப்பட்டிருப்பதால்தான் அது வரும்போது இதயமெல்லாம் உருகும்: கைகளெல்லாம் தளரும்: மனமெல்லாம் மயங்கும்: முழங்கால்களெல்லாம் நீரைப்போல் அலம்பும். இதோ அது வருகிறது. அது வந்தே தீரும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.