14
மானிடா! நீயோ இறைவாக்குரை: கை கொட்டு: இருமுறை, மும்முறை வாள் வீசப்படட்டும்: கொலைக்கான வாள் அது: அவர்களைச் சூழ்ந்து வரும் படுகொலைக்கான வாள் அது.
15
அது இதயங்களைக் கலங்கச் செய்யும்: நான் வைத்துள்ள அவ்வாள் ஒவ்வொரு நகர் வாயிலிலும் பலரை வீழ்த்தும். ஆம், அது மின்னுவதற்காகக் செய்யப்பட்டது: கொலைக்காக கூர்மையாக்கப்பட்டது.
16
“வலப்புறமும், இடப்புறமும் உன் கூர்மையைக் காட்டு: எத்திசையெல்லாம் உன் முகம் திருப்பப்படுகிறதோ அங்கெல்லாம் காட்டு:
17
நானும் கை கொட்டிச் சினம் தீர்த்துக்கொள்வேன். இதை உரைப்பவர் ஆண்டவராகிய நானே.