21
ஆனால், அவர்களின் பிள்ளைகளோ எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். கடைப்பிடிப்போர்க்கு வாழ்வளிக்கும் என் நியமங்களின்படி அவர்கள் நடக்கவில்லை. என் நீதிநெறிகளையும் கடைப்பிடித்து ஒழுகவில்லை. என் ஓய்வு நாள்களை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். எனவே, பாலைநிலத்திலேயே என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.
22
ஆயினும், நான் இவர்களைப் புறப்படச் செய்ததைக் கண்ட பிறவினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நான் நடந்துகொண்டு என்னை அடக்கிக் கொண்டேன்.
23
மேலும் அவர்களை வேற்றினத்தாரிடையே பிரிந்துபோகச் செய்வதாகவும், நாடுகளிடையே சிதறிப்போகச் செய்வதாகவும், பாலைநிலத்தில் அவர்களுக்கெதிராக ஆணையிட்டுக் கூறினேன்.