1
ஏழாம் ஆண்டில், ஐந்தாம் மாதத்தின் பத்தாம் நாளன்று, இஸ்ரயேல் மக்களின் பெரியோருள் சிலர் ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டறிய வந்து, என் முன் அமர்ந்தனர்.
2
அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:
3
“மானிடா! இஸ்ரயேல் மக்களின் பெரியோரிடம் பேசி அவர்களுக்கு அறிவி: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் திருவுளத்தைக் கேட்டறிய வந்திருக்கிறீர்களோ? என்மேல் ஆணை! நீங்கள் கேட்டறிய நான் விடமாட்டேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.