எசேக்கியேல் 19:3-6 - WCV
3
அவள் வளர்த்த குட்டிகளுள் ஒன்று இளஞ்சிங்கமாக வளர்ச்சியுற்றது: அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.
4
வேற்றினத்தார் அதனைப்பற்றிக் கேள்வியுற்று, அதனைப் படுகுழியில் வீழ்த்தினர்: அதனைச் சங்கிலிகளால் கட்டி எகிப்துக்குக் கொண்டு போயினர்.
5
தாய்ச்சிங்கமோ, தான் நம்பிக்கையோடு காத்திருந்தது வீணாயிற்று என்று கண்டாள்: எனவே தன் குட்டிகளுள் வேறொன்றை எடுத்து அதனையும் ஓர் இளஞ்சிங்கமாக உருவாக்கினாள்.
6
அது சிங்கங்களோடு நடமாடி ஓர் இளஞ்சிங்கம் ஆயிற்று: அது இரை தேடப் பழகி, மனிதரைத் தின்னலாயிற்று.