எசேக்கியேல் 17:6-10 - WCV
6
அது துளிர்த்து தாழ்ந்து படரும் திராட்சைக் கொடியாயிற்று. “அதன் கிளைகள் அக்கழுகுக்கு நேர் மேலே வளர்ந்தன. வேர்களோ அதற்கு நேர் கீழே படர்ந்தன. இவ்வாறு அது திராட்சைக் கொடியாகி, கொப்புகளை விட்டுக் கிளைகளைப் பரப்பியது.
7
ஆனால், பரந்த இறக்கைகளும் மிகுந்த இறகுகளும் கொண்ட வேறொரு கழுகும் இருந்தது. இந்தத் திராட்சைக் கொடி, நீர் பெறவேண்டி, தான் நடப்பட்டிருந்த நிலப்பரப்புக்கு அப்பால் இருந்த அக்கழுகை நோக்கித் தன் வேர்களை ஓடச்செய்து, தன் கிளைகளையும் அதன் பக்கமாய்த் திருப்பிற்று.
8
கிளைபரப்பிக் கனிகொடுக்கும் சிறந்த ஒரு திராட்சைக் கொடியாய் விளங்கும் பொருட்டன்றோ செழிப்பு நிலத்தில் இது நடப்பட்டது!
9
நீ சொல்: தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இது செழிக்குமா? இதனை வேரோடு பிடுங்கி இதன் பழக்குலைகளைக் கொய்து விட, துளிர்த்த இதன் இலைகளொல்லாம் வாடி வதங்க இது பட்டுப் போகாதா? இதனை வேரோடு பிடுங்கியெறிய மிகுந்த கைவன்மையோ, மக்கள் திரளோ வேண்டியதில்லை.
10
இது வேறிடத்தில் நடப்பட்டாலும் செழிக்குமா? கீழைக்காற்று இதன்மேல் வீசும்போது இது முற்றிலும் வாடி விடாதா? இது முளைவிட்ட பாத்திலேயே உலர்ந்து போகுமே.