எசேக்கியேல் 16:37-39 - WCV
37
நீ இன்பம் துய்த்த உன் காதலர் அனைவரையும் உனக்கெதிராக நான் ஒன்று திரட்டப்போகிறேன். நீ விரும்பியவர்கள், நீ வெறுத்தவர்கள் அனைவரையும் நாற்றிசையினின்றும் உனக்கெதிராய் ஒன்று சேர்ப்பேன். அவர்கள் முன்னிலையில் உன் ஆடையை உரிந்து போடுவேன். அவர்கள் அனைவரும் உன் திறந்த மேனியைக் காண்பர்.
38
பிறர் கணவர் நயந்த பெண்டிரையும், இரத்தம் சிந்திய பெண்டிரையும் தீர்ப்பிடுதல்போல், உன்னையும் தீர்ப்பிடுவேன்: என் சினத்தாலும் சகிப்பின்மையாலும் உன்மேல் இரத்தப்பழி சுமத்துவேன்.
39
பின் உன்னை அவர்களிடம் கையளிப்பேன். அவர்கள் உன் தொழுகைக் கூடங்களைத் தகர்த்து உன் தொழுகை மேடுகளை தரைமட்டமாக்குவர்: உன் ஆடைகளை உரிந்து, உன் அணிகலன்களைப் பிடுங்கிக் கொண்டு, உன்னைத் திறந்தமேனியாயும் வெறுமையாயும் விட்டுவிடுவர்.