எசேக்கியேல் 16:28-34 - WCV
28
இன்னும் நிறைவடையாமல் நீ அசீரியரின் புதல்வருடன் வேசித்தனம் செய்தாய். அவர்களுடன் விபசாரம் செய்தும் உன் ஆசை அடங்கவில்லை.
29
ஆகையால், வாணிக நாடாகிய கல்தேயாவுடன் நீ மிகுதியாய் வேசித்தனம் செய்தாய்: அப்பொழுதும் உன் மோகம் தீரவில்லை.
30
வெட்கங்கெட்ட விலைமகளின் செயல்களையெல்லாம் உன் இதயத்தின் காமத்தால் செய்தாயன்றோ!, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
31
ஒவ்வொரு தெருக்கோடியிலும் தொழுகைக் கூடம் கட்டினாய்: ஒவ்வொரு திறந்த வெளியிலும் தொழுகை மேடு எழுப்பினாய்: மற்ற விலைமாதரைப்போல் நீ ஊதியம் கேட்கவில்லை.
32
பிறரின் கணவரை நயக்கும் மனையாள் இவள்! தன் கணவனுக்குப் பதில் அன்னியரையே நாடுகிறாள் இவள்!
33
எல்லா விலைமாதரும் ஊதியம் பெறுவர். நீயோ உன் காதலர் அனைவர்க்கும் ஊதியம் தருகின்றாய்! நாற்றிசையினின்றும் உன்னுடம் விபசாரம் செய்ய வருவோர்க்குக் கையூட்டு அளிக்கின்றாய்.
34
எனவே, உன் வேசித்தொழிலில் கூட நீ பிற பெண்களினின்று வேறு பட்டியிருக்கிறாய். கூடா ஒழுக்கத்திற்கு உன்னை யாரும் தூண்டுவதில்லை. நீயே பிறர்க்கு ஊதியம் தருகிறாய்: நீ யாரிடமும் பெறுவதில்லை. இது வன்றோ உன் பண்பாடு!