23
எல்லாத் தீச்செயல்களையும் செய்த உனக்கு ஐயோ கேடு, என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
24
நீ உனக்கெனத் தொழுகைக்கூடங்கள் அமைத்துக்கொண்டாய்: திறந்த வெளியிலெல்லாம் தொழுகை மேடுகள் எழுப்பிக் கொண்டாய்.
25
எல்லாத் தெருக்கோடிகளிலும், உன் தொழுகை மேடுகளை அமைத்தாய். உன் அழகைத் தரக்குறைவாக்கி, வருவோர் போவோர்க்கெல்லாம் உன் உடலைக் கொடுத்து, மிதமிஞ்சிய வேசித்தனம் செய்தாய்.