எசேக்கியேல் 15:3-5 - WCV
3
ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து கட்டை எடுக்கப்படுகிறதா? அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட ஒரு முளையை அதிலிருந்து செய்வார்களா?
4
இதோ, அது நெருப்புக்கு இரையாகப் போடப்படுகிறது: அதன் இரு முனைகளையும் நெருப்பு எரிக்கிறது: அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது: அது எந்த வேலைக்காவது பயன்படுமா?
5
இதோ, அது முழுமையாய் இருந்த போதே அதைக்கொண்டு ஒரு வேலையும் செய்யமுடியவில்லை. நெருப்பால் எரிந்து கருகிய அதை எந்த வேலைக்காவது பயன்படுத்த முடியுமா?