2
மானிடா! காட்டிலிருக்கும் எல்லா மரக்கிளைகளையும்விட திராட்சைக்கொடி எவ்வகையில் சிறந்தது?
3
ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து கட்டை எடுக்கப்படுகிறதா? அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட ஒரு முளையை அதிலிருந்து செய்வார்களா?
4
இதோ, அது நெருப்புக்கு இரையாகப் போடப்படுகிறது: அதன் இரு முனைகளையும் நெருப்பு எரிக்கிறது: அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது: அது எந்த வேலைக்காவது பயன்படுமா?