எசேக்கியேல் 12:22-28 - WCV
22
“மானிடா! இஸ்ரயேல் நாட்டில் உங்களிடையே வழங்கிவரும் பழமொழி என்ன? 'நாள்கள் கடந்துகொண்டே செல்கின்றன: காட்சிகளோ பலிப்பதில்லை' என்கிறீர்கள்.
23
ஆகையால் அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: அந்தப் பழமொழிக்கு நான் ஒரு முடிவு கட்டுவேன். இனி அதை இஸ்ரயேலில் வழங்கமாட்டார்கள். ஏனெனில் அவர்களுக்குச் சொல்: நாள்கள் நெருங்கிவிட்டன. முன்னறிவிப்புக் காட்சிகள் யாவும் நிறைவேறும்.
24
இஸ்ரயேல் வீட்டினுள் இனிப் பொய்யான காட்சியும் குறி சொல்லலும் இல்லாமற்போம்.
25
ஏனெனில், நானே ஆண்டவர்: நானே உரைத்திடுவேன்: நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்: இனிமேல் காலந்தாழ்த்தாது: கலகம் செய்யும் வீட்டாரே, நானே உரைத்திடுவேன்: அவ்வாக்கை நானே நிறைவேற்றுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.
26
ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.
27
மானிடா! 'இவன் காணும் காட்சிகள் நெடுநாள்களுக்கப்பால் உள்ளவை: இவன் உரைக்கும் இறைவாக்கும் தொலையில் இருக்கும் காலங்களைப் பற்றியது' என இஸ்ரயேல் வீட்டார் சொல்லிக்கொள்கின்றனர்.
28
எனவே அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் வார்த்தைகளுள் எதுவும் இனிமேல் காலந்தாழ்த்தாது. நான் உரைக்கும் வாக்கு நிறைவேறியே தீரும்,” என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.