13
“சுழல் சக்கரங்கள்” என்று அவை அழைக்கப்பட்டதை நான் கேட்டேன்.
14
ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன: முதலாவது எருது முகம்: இரண்டாவது மனித முகம்: மூன்றாவது சிங்க முகம்: நான்காவது கழுகு முகம்.
15
அப்பொழுது கெருபுகள் மேலெழந்தன. கெபார் ஆற்றோரம் நான் கண்ட உயிரினங்கள் இவையே.
16
கெருபுகள் சென்றபோது சக்கரங்களும் அவற்றோடு சென்றன. கெருபுகள் நிலத்திலிருந்து மேலெழும்பத் தங்கள் இறக்கைகளை விரித்தபோது சக்கரங்கள் திரும்பாமல் அவற்றுடன் இருந்தன.
17
அவை நின்றபோது இவையும் நின்றன. அவை எழுந்தபோது இவையும் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி இவற்றில் இருந்தது.