எசேக்கியேல் 1:19-21 - WCV
19
உயிரினங்கள் செல்லும்போது, சக்கரங்களும் அவற்றோடு செல்லும். அவ்வுயிரினங்கள் நிலத்தினின்று மேலெழும்போது சக்கரங்களும் எழும்பும்.
20
எங்கெல்லாம் ஆவி ஈர்த்துச் சென்றதோ அங்கெல்லாம் அவையும் சென்றன. உயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்ததால் சக்கரங்களும் அவற்றோடு எழுந்தன.
21
அவை செல்கையில் இவையும் சென்றன. அவை நிற்கையில் இவையும் நின்றன. அவை நிலத்தினின்று மேலெழுந்தபோது சக்கரங்களும் அவற்றுடன் எழுந்தன. ஏனெனில் அவ்வுயிரினங்களின் ஆவி சக்கரங்களில் இருந்தது.