புலம்பல் 2:1-3 - WCV
1
ஐயோ! மகள் சீயோனை ஆண்டவர் தம் சினமென்னும் மேகத்தால் மூடினார்! அவர் இஸ்ரயேலின் மேன்மையை விண்ணினின்று மண்ணுக்குத் தள்ளினார்! அவரது சினத்தின் நாளில் தம் கால்மணையை மனத்தில் கொள்ளவில்லை!
2
ஆண்டவர் யாக்கோபின் அனைத்துக் குடியிருப்புகளையும் இரக்கமின்றி அழித்தார்: அவர் சீற்றமடைந்து மகள் யூதாவின் அரண்களைத் தகர்த்தார்: அவற்றைத் தரைமட்டமாக்கினார். அவரது நாட்டையும் அதன் தலைவர்களையும் மேன்மை குலையச் செய்தார்.
3
அவர் வெஞ்சினம் கொண்டு இஸ்ரயேலின் கொம்பை முற்றிலும் வெட்டிவிட்டார்: பகைவன் வந்தபொழுது தம் வலக்கையைப் பின்புறம் மறைத்துக்கொண்டார்: சூழ்ந்திருக்கும் யாவற்றையும் எரிக்கும் தீப்பிழம்பென, அவர் யாக்கோபின் மீது பற்றியெரிந்தார்.