புலம்பல் 1:7 - WCV
எருசலேம், தன் துன்ப நாள்களிலும், அகதியாய் வாழ்ந்தபோதும், முன்னாள்களில் தனக்கிருந்த நலன்கள் அனைத்தையும் நினைவுகூர்ந்தாள்: அவளின் மக்கள் எதிரிகளின் கைகளில் சிக்கினார்கள்: அவளுக்கு உதவி செய்வார் யாருமில்லை: அவளது வீழ்ச்சியைக் கண்ட எதிரிகள் அவளை ஏளனம் செய்தனர்.