எரேமியா 9:17-19 - WCV
17
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! கேளுங்கள். ஒப்பாரி வைக்கும் பெண்களை வரச்சொல்லுங்கள்: அவர்களுள் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சொல்லியனுப்புங்கள்.
18
அவர்கள் விரைந்து வந்து நம்மைக் குறித்துப் புலம்பட்டும்: நம் கண்கள் நீர் பொழியட்டும்: நம் இமைகள் நீர் சொரியட்டும்.
19
ஏனெனில், சீயோனிலிருந்து புலம்பல் கேட்கின்றது: “நாம் இப்படிப் பாழடைந்து விட்டோமே: நம் மானமெல்லாம் போயிற்றே: நாட்டைவிட்டுச் செல்ல வேண்டியதாயிற்றே. நம் குடியிருப்புகள் தகர்க்கப்பட்டனவே.”