எரேமியா 9:10-12 - WCV
10
மலைகளைக் குறித்து அழுது புலம்புவோம்: பாழ்வெளி மேய்ச்சல் நிலத்தின் பொருட்டு ஒப்பாரி வைப்போம்: ஏனெனில் அனைத்தும் தீய்ந்து போயின: அவை வழியாய்ச் செல்வோர் யாருமில்லை: கால்நடைகளின் ஒலியும் கேட்கவில்லை: வானத்துப் பறவைகள் முதல் விலங்குகள் வரை அனைத்துமே ஓடி மறைந்து விட்டன.
11
எருசலேமை அழித்துக் கற்குவியலாக்குவேன்: அதனைக் குள்ளநரிகளின் வளையாக்குவேன்: யூதா நகர்களை யாரும் வாழாப் பாழ்வெளியாக்குவேன்.
12
இதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு ஞானமுள்ளவர் எவர்? இதை அறிவிக்குமாறு எவருக்கு ஆண்டவர் வாய்மொழியாகக் கூறியுள்ளார்? நாடு அழிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பாலை நிலம் போல் தீய்ந்துவிட்டது ஏன்?