5
ஏன் இந்த எருசலேமின் மக்கள் என்றென்றைக்கும் என்னை விட்டு விலகிப் பொய்யைப் பற்றிக்கொண்டு நிற்கின்றார்கள்?
6
நான் செவிசாய்த்தேன்: உற்றுக்கேட்டேன். அவர்கள் சரியானதைச் சொல்லவில்லை. “நான் என்ன செய்துவிட்டேன்?” என்று கூறுகிறார்களேயன்றி எவருமே தம் தீச்செயலுக்காக வருந்தவில்லை. போர்க்களத்தில் பாய்ந்தோடும் குதிரைபோல யாவருமே தம் வழியில் விரைகின்றார்கள்.
7
வானத்துக் கொக்கு தன் காலங்களை அறிந்துள்ளது. புறாவும் தகைவிலானும் நாரையும் தாம் இடம் பெயரும் காலத்தை அறிந்துள்ளன. என் மக்களோ, ஆண்டவரின் நீதியை உணரவில்லையே!
8
“நாங்கள் ஞானிகள்: ஆண்டவரின் சட்டம் எங்களோடு உள்ளது” என நீங்கள் எவ்வாறு கூறமுடியும்? மறைநூல் அறிஞரின் பொய் எழுதும் எழுதுகோல் பொய்யையே எழுதிற்று.
9
ஞானிகள் வெட்கமடைவர்: திகிலுற்றுப் பிடிபடுவர்: ஏனெனில், அவர்கள் ஆண்டவரின் வாக்கைப் புறக்கணித்தார்கள்: இதுதான் அவர்களின் ஞானமா?