10
ஆகவே, நான் அவர்களுடைய மனைவியரை வேற்றவருக்குக் கொடுப்பேன்: அவர்களுடைய நிலங்களைக் கைப்பற்றியோருக்கே கொடுப்பேன்: ஏனெனில், சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் கொள்ளை இலாபம் தேடுகின்றார்கள். இறைவாக்கினர் முதல் குருக்கள்வரை அனைவரும் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டுள்ளார்கள்.
11
அமைதியே இல்லாத பொழுது “அமைதி, அமைதி” என்று கூறி என் மகளாகிய மக்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலோட்டமாகவே குணப்படுத்தினர்.
12
அருவருப்பானதைச் செய்தபோது அவர்கள் வெட்கம் அடைந்தார்களா? அப்போதுகூட அவர்கள் வெட்கம் அடையவில்லை: நாணம் என்பது என்னவென்று அவர்களுக்குத் தெரியாது: எனவே மடிந்து விழுந்தவர்களோடு அவர்களும் மடிந்து விழுவர்: நான் அவர்களை தண்டிக்கும் போது அவர்கள் வீழ்த்தப்படுவர், என்கிறார் ஆண்டவர்.