எரேமியா 51:34-37 - WCV
34
பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் என்னை விழுங்கிவிட்டான்: அவன் என்னைக் கசக்கிப் பிழிந்து விட்டான்: வெறுமையான பாத்திரம்போல் என்னை ஆக்கிவிட்டான்: அரக்கன் போன்று என்னை விழுங்கிவிட்டான்: என் அருஞ்சுவை உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டான். என்னைக் கொப்பளித்துத் துப்பிவிட்டான்.
35
“எனக்கும் என் உறவினர்க்கும் இழைக்கப்பட்ட கொடுமை பாபிலோன் மேல் வரட்டும்” என்று சீயோன் குடிகள் கூறட்டும்: “என் இரத்தப் பழி கல்தேயக் குடிகள்மீது வந்துவிழட்டும்,” என்று எருசலேம் சொல்லட்டும்.
36
எனவே ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே உனக்காக வழக்காடுவேன்: உன் பொருட்டுப் பழிவாங்குவேன்: அதன் கடல் வற்றிப் போகச் செய்வேன்: அதன் நீரூற்றுகள் காய்ந்துபோகச் செய்வேன்.
37
பாபிலோன் பாழ்மேடு ஆகும்: குள்ளநரிகளின் உறைவிடமாக மாறும். அது குடியிருப்பாரற்றுப் பேரச்சத்திற்கும் நகைப்பிற்கும் உள்ளாகும்.