20
நீ என் சம்மட்டியும் படைக்கருவியும் ஆவாய்: நான் உன்னைக்கொண்டு மக்களினங்களை நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு அரசுகளை அழித்தொழிப்பேன்.
21
உன்னைக்கொண்டு குதிரையையும் குதிரைவீரனையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு தேரையும் தேரோட்டியையும் நொறுக்குவேன்.
22
உன்னைக்கொண்டு ஆணையும் பெண்ணையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு முதியோனையும் சிறுவனையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு இளைஞனையும் இளம்பெண்ணையும் நொறுக்குவேன்:
23
உன்னைக்கொண்டு ஆயனையும் அவனது மந்தையையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு உழவனையும் அவன் காளைகளையும் நொறுக்குவேன்: உன்னைக்கொண்டு ஆளுநர்களையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன்:
24
பாபிலோனும் கல்தேயாவின் குடிகள் எல்லாரும் சீயோனில் செய்த தீச்செயல் அனைத்தின் பொருட்டு, உங்கள் கண்முன்னால் அவர்களைப் பழிவாங்குவேன், என்கிறார் ஆண்டவர்.