4
ஆண்டவர் கூறுகிறார்: அந்நாள்களில்-அக்காலத்தில்-இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும் சேர்ந்து வருவார்கள்: அழுது கொண்டே திரும்பி வருவார்கள்: தங்கள் கடவுளான ஆண்டவரை அவர்கள் தேடுவார்கள்.
5
அவர்கள் சீயோனை நோக்கியவண்ணம், அங்குப் போகும் வழியைக் கேட்பார்கள்: 'வாருங்கள்: மறக்கப்படாத, என்றுமுள உடன்படிக்கை மூலம் ஆண்டவரோடு நம்மையே இணைத்துக்கொள்வோம்' என்பார்கள்.
6
என் மக்கள் காணாமற்போன ஆடு போன்றவர்கள். அவர்களின் ஆயர்கள் அவர்களை வழி தவறிப் போகச் செய்தார்கள்: மலைகள் மேல் அவர்களைக் கலங்கடித்தார்கள். மலைக்கும் குன்றுக்கும் இடையில் மக்கள் அலைந்து திரிந்தார்கள்: தங்கள் உறைவிடத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள்.