12
அவர்கள் ஆண்டவரைக் குறித்துப் பொய்யாகச் சொன்னது: “அவர் ஒன்றும் செய்யமாட்டார்: நமக்குத் தீமை எதுவும் வராது: வாளையும் பஞ்சத்தையும் நாம் காணப்போதில்லை.”
13
இறைவாக்கினர் பேசுவதெல்லாம் காற்றோடு காற்றாய்ப் போகும். இறைவாக்கு அவர்களிடம் இல்லை: அவர்கள் கூறியவாறு அவர்களுக்கே நிகழும்.
14
ஆகவே படைகளின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: “அவர்கள் இப்படிப் பேசியதால் நான் உன் வாயில் வைக்கும் என் சொற்கள் நெருப்பாகும். உன் வாயில் வைத்த அவை மரக்கட்டைகளாகிய இம்மக்களை எரித்துவிடும்.