35
படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: ஏலாமின் வலிமைக்கு ஆதாரமான வில்லை முறித்துப்போடுவேன்.
36
வானத்தின் நான்கு திசைகளினின்று நால்வகைக் காற்றுகளை ஏலாம்மீது வரவழைப்பேன்: இந்த எல்லாக் காற்றுகளினாலும் அவர்களைச் சிதறடிப்பேன். ஏலாமினின்று விரட்டியடிக்கப்பட்டோர் சென்றடையாத நாடே இராது.
37
ஏலாமின் எதிரிகள் முன்னும், அதன் உயிரைப் பறிக்கத் தேடுவோர் முன்னும் நான் அதை நடுங்கச்செய்வேன்: அவர்கள்மேல் தண்டனை வருவிப்பேன். என் சினம் அவர்கள் மேல் மூண்டெழும், என்கிறார் ஆண்டவர். அவர்களை முற்றிலும் அழித்துத் தீர்க்கும்வரை, அவர்களைப் பின்தொடருமாறு வாளை அனுப்பி வைப்பேன்.
38
ஏலாமில் என் அரியணையை அமைப்பேன்: அவர்களின் அரசரையும் தலைவர்களையும் அழிப்பேன், என்கிறார் ஆண்டவர்.
39
ஆயினும் இறுதி நாள்களில் நான் ஏலாமின் சொத்து, செல்வங்களைத் திரும்பக் கொணர்வேன், என்கிறார் ஆண்டவர்.