எரேமியா 48:43-45 - WCV
43
மோவாபின் மகனே, திகிலும் படுகுழியும் கண்ணியுமே உன்முன் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர்.
44
திகிலுக்கு அஞ்சி ஓடுபவன் படுகுழியில் விழுவான்: படுகுழியினின்று வெளியே வருபவன் கண்ணியில் மாட்டிக்கொள்வான். அவர்களுடைய தண்டனைக் காலத்தில் இவற்றை மோவாபின்மீது வரவழைப்பேன், என்கிறார் ஆண்டவர்.
45
தப்பியோடுவோர் எஸ்போனின் நிழலில் வலுவிழந்து நிற்கின்றனர்: எஸ்போனிலிருந்து நெருப்பு கிளம்பிற்று: சீகோனிலிருந்து தீப்பிழம்பு புறப்பட்டது: மோவாபின் நெற்றியை அது விழுங்கிற்று: கலக்காரரின் உச்சந்தலையை அது பொசுக்கிற்று.