31
மோவாபை முன்னிட்டு நான் ஓலமிடுவேன்: மோவாபு முழுவதையும் குறித்து அலறியழுவேன்: கீர்கெரேசின் மனிதர் பொருட்டுப் புலம்புவேன்.
32
சிப்மாவின் திராட்சைக் கொடியே, யாசேருக்காக அழுவதைவிட அதிகமாய் உனக்காக அழுவேன். உன் கொடிகள் கடல் வரை படர்ந்துள்ளன: யாசேர் கடலை எட்டியுள்ளன. கோடைப் பழங்கள்மீதும் திராட்சைப் பழங்கள்மீதும் “அழிப்போன்” பாய்ந்து வந்தான்.
33
செழிப்பான மோவாபு நாட்டினின்று மகிழ்ச்சியும், அக்களிப்பும் அகற்றப்பட்டுவிட்டன: திராட்சை ஆலைகளில் இரசம் வற்றிப்போகச் செய்துள்ளேன்: மகிழ்ச்சியோடு பழம் மிதிப்பவன் எவனும் இலலை: மகிழ்ச்சியின் ஆரவாரம் அங்கு எழுவதில்லை.
34
எஸ்போனும் எலயாலேயும் கூக்குரலிடுகின்றன. யாகாசு வரை அவற்றின் அழுகுரல் கேட்கிறது: சோவாரிலிருந்து ஒரோனாயிம், எக்லாத்து செலிசியாவரை அது ஒலிக்கிறது. ஏனெனில், நிம்ரிம் தண்ணீரும் வற்றிப்போனது.