எரேமியா 43:10-13 - WCV
10
பிறகு நீ அவர்களிடம் சொல்ல வேண்டியது: இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: என் ஊழியனும் பாபிலோனிய மன்னனுமான நெபுகத்னேசரை இங்கு வரவழைப்பேன். நான் மறைத்துவைத்துள்ள இந்தக் கற்கள்மீது அவன் தன் அரியணையை அமைத்துத் தன் கொற்றக்குடையை விரித்துவைப்பான்.
11
அவன் வந்து, எகிப்து நாட்டைத் தாக்கி அழிப்பான்: கொள்ளைநோய்க்குரியோர் கொள்ளைநோய்க்குள்ளாவர்: நாடு கடத்தலுக்குரியோர் நாடுகடத்தப்படுவர்: வாளுக்குரியோர் வாளால் மாள்வர்.
12
மேலும் அவன் எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்: அத்தெய்வச் சிலைகளை எரித்துத் தூக்கிச்செல்வான். இடையன் தன் ஆடையைத் துப்புரவு செய்வதுபோல், அவன் எகிப்தைத் துப்புரவு செய்வான்: அங்கிருந்து நலமே திரும்பிச் செல்வான்.
13
எகிப்து நாட்டில் உள்ள பெத்சமேசின் தூண்களை அவன் தகர்த்தெறிவான்: எகிப்தியத் தெய்வங்களின் கோவில்களைத் தீக்கிரையாக்குவான்.