13
காரயாகின் மகன் யோகனானும் நாட்டில் ஆங்காங்கே இருந்த படைத்தலைவர்கள் அனைவரும் மிஸ்பாவில் இருந்த கெதலியாவிடம் சென்று,
14
“அம்மோனியரின் மன்னனாகிய பகலீசு உம்மைக் கொல்லும் பொருட்டு நெத்தனியாவின் மகன் இஸ்மயேலை அனுப்பி வைத்துள்ளான் என்று உறுதியாய் உமக்குத் தெரியுமன்றோ!” என்று கூறினர். ஆனால் அகிக்காமின் மகன் கெதலியா அவர்களை நம்பவில்லை.
15
பின்னர் காரயாகின் மகன் யோகனான் மிஸ்பாவில் கெதலியாவிடம் தனியாகச் சென்று, “நான் பேய், நெத்தனியாவின் மகன் இஸ்மயேலைக் கொல்ல எனக்கு அனுமதி கொடும். அது யாருக்கும் தெரியவராது. உம்மை ஏன் அவன் கொலைசெய்யவேண்டும்? அதனால் உம் பொறுப்பில் கூடி வாழும் யூதா நாட்டினர் அனைவரும் சிதறிப் போவார்கள்: யூதாவின் எஞ்சினோரும் அழிவார்களே!” என்று சொன்னான்.
16
அகிக்காமின் மகன் கெதலியாவோ காரயாகின் மகன் யோகனானை நோக்கி, “நீ இச்செயலைச் செய்யாதே. ஏனெனில் இஸ்மயேலைப் பற்றி நீ கூறுவது பொய்” என்றார்.