6
சீயோனுக்கு நேராகக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள்: விரைந்து தப்பியோடுங்கள்: நிற்காதீர்கள்: ஏனெனில், வடக்கிலிருந்து தீமை வரச்செய்வேன்: அது பேரழிவாய் இருக்கும்.
7
சிங்கம் ஒன்று புதரிலிருந்து கிளம்பியுள்ளது: மக்களினங்களை அழிப்பவன் புறப்பட்டு விட்டான்: உங்கள் நாட்டைப் பாழாக்க, அவன் தன் இடத்திலிருந்து வெளியேறிவிட்டான்: உங்கள் நகர்கள் பாழாடைந்து குடியற்றுப் போகும்.
8
எனவே, சாக்கு உடைஉடுத்திக் கொள்ளுங்கள். அழுது புலம்புங்கள்: ஒப்பாரி வையுங்கள்: ஏனெனில், ஆண்டவரின் கோபக் கனல் நம்மை விட்டு நீங்கவில்லை.
9
அக்காலத்தில் அரசனும் தலைவர்களும் நம்பிக்கையிழந்துவிடுவர், என்கிறார் ஆண்டவர்: குருக்கள் திடுக்கிட்டுப் போவர்: இறைவாக்கினர் திகைத்து நிற்பர்.