23
நான் நாட்டைப் பார்த்தேன்: அது பாழ்நிலமாய்க் கிடந்தது: வானங்களைப் பார்த்தேன்: அவற்றில் ஒளியே இல்லை.
24
நான் மலைகளைப் பார்த்தேன்: இதோ! அவை அதிர்ந்தன: குன்றுகள் அனைத்தும் அசைந்தன.
25
நான் பார்த்தேன்: மனிதரையே காணவில்லை: வானத்துப் பறவைகள் அனைத்தும் பறந்து போய்விட்டன.
26
நான் பார்த்தேன்: இதோ செழிப்பான நிலமெல்லாம் பாலை நிலமாகிவிட்டது: ஆண்டவரின் திருமுன் அவரது கோபக் கனலால் அதன் நகர்கள் அனைத்தும் தகர்க்கப்பட்டன.
27
ஆண்டவர் கூறுவது இதுவே: நாடு முழுவதும் பாழடைந்து போகும்: எனினும் அதனை முற்றிலும் பாழாக்கமாட்டேன்.
28
இதனை முன்னிட்டு நாடு புலம்பும்: மேலே வாகனங்கள் இருளடையும்: எனெனில், நான் சொல்லிவிட்டேன்: இது பற்றி வருந்தமாட்டேன்: நான் முடிவு செய்து விட்டேன்: மனம் மாறமாட்டேன்.