எரேமியா 4:19-22 - WCV
19
என் அடிவயிறு கலங்குகின்றது: நான் வேதனையால் துடிக்கின்றேன்: என் இதயம் துயரத்தால் பதைபதைக்கின்றது: நான் வாளாவிருக்க முடியுமா? என் நெஞ்சே, எக்காள ஒலி என் காதில் விழுகிறதே! போர்க்குரல் கேட்கிறதே!
20
அழிவின் மேல் அழிவு என்ற செய்தியே வருகின்றது: நாடு முழுவதும் பாழடைந்துவிட்டது: நொடிப்பொழுதில் என் கூடாரங்களும், இமைப்பொழுதில் மூடு திரைகளும் அழிந்து போயின:
21
எதுவரைக்கும் நான் போர்க்கொடியைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்? எக்காளத்தின் குரலைக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்?
22
என் மக்கள் அறிவிலிகள்: என்னை அவர்கள் அறிந்து கொள்ளவில்லை: மதிகெட்ட மக்கள் அவர்கள்: உய்த்துணரும் ஆற்றல், அவர்களுக்கில்லை: தீமை செய்வதில் அவர்கள் வல்லவர்கள்: நன்மை செய்ய அவர்களுக்குத் தெரிவதில்லை.