எரேமியா 38:14-16 - WCV
14
அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எரேமியாவிடம் ஆளனுப்பி, அவரை ஆண்டவர் இல்லத்தின் மூன்றாம் வாயிலுக்கு வரவழைத்தான். அரசன் எரேமியாவை நோக்கி,”நான் உம்மிடம் ஒன்று கேட்பேன். நீர் என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது” என்று சொன்னான்.
15
எரேமியா செதேக்கியாவை நோக்கி, “நான் உள்ளதைச் சொன்னால் நீர் என்னைத் திண்ணமாய்க் கொன்றுபோடமாட்டீரா? நான் உமக்கு அறிவுரை கூறினாலும் நீர் கேட்கமாட்டீரே!” என்றார்.
16
அதற்கு அரசன் செதேக்கியா “நமக்கு இந்த உயிர் கொடுத்த வாழும் ஆண்டவர் மேல் ஆணை! நான் உம்மைக் கொல்லமாட்டேன். உமது உயிரைப் பறிக்கத்தேடும் இம்மனிதர் கையிலும் உம்மை ஒப்புவிக்க மாட்டேன்” என்று எரேமியாவுக்கு மறைவாக ஆணையிட்டுக் கூறினான்.