எரேமியா 37:5-8 - WCV
5
இதற்கிடையில் பார்வோனின் படை எகிப்தினின்று புறப்பட்டு வந்தது. எருசலேமை ஏற்கெனவே முற்றுகையிட்டுக் கொண்டிருந்த கல்தேயர் இச்செய்தியைக் கேள்வியுற்றதும், எருசலேமைவிட்டுப் பின்வாங்கினர்.
6
அப்பொழுது இறைவாக்கினர் எரேமியாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது:
7
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் அறிவுரையை நாடி உங்களை என்னிடம் அனுப்பிவைத்த யூதா அரசனிடம் நீங்கள் சொல்லவேண்டியது: இதோ, உனக்குத் துணை புரிய வந்துள்ள பார்வோனின் படை தன் சொந்த நாடான எகிப்துக்கே திரும்பிப் போகும்.
8
கல்தேயர் மீண்டும் வந்து இந்நகரைத் தாக்குவர்: அதனைக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவர்.