எரேமியா 37:14-16 - WCV
14
அதற்கு எரேமியா, “அது பொய். நான் கல்தேயர் பக்கம் தப்பிச் செல்ல முயலவில்லை” என்றார். அவர் சொன்னதை இரிய்யா கேட்கவில்லை. எனவே அவன் எரேமியாவைப் பிடித்து, தலைவர்களிடம் கொண்டு வந்து நிறுத்தினான்.
15
தலைவர்கள் சினம் கொண்டு எரேமியாவை அடித்து, செயலர் யோனத்தானுடைய வீட்டில் அடைத்துவைத்தார்கள்: ஏனெனில் அவ்வீடு ஒரு சிறைக்கூடமாய் மாற்றப்பட்டிருந்தது.
16
எரேமியா நிலவறைக் கூடத்திற்குள் சென்று அங்கே நெடுநாள் தங்கியிருந்தார்.