1
யோசியாவின் மகனும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூதா நாட்டின் அரசனாக ஏற்படுத்தியிருந்தவனுமான செதேக்கியா, யோயாக்கிமின் மகன் கோனியாவுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான்.
2
அவனோ, அவனுடைய பணியாளரோ நாட்டு மக்களோ இறைவாக்கினர் எரேமியா வாயிலாக ஆண்டவர் உரைத்திருந்த சொற்களுக்குச் செவி கொடுக்கவில்லை.
3
செலேமியாவின் மகன் எகுக்கலையும், மாசேயாவின் மகனும் குருவுமான செப்பனியாவையும் அரசன் செதேக்கியா இறைவாக்கினர் எதேமியாவிடம் அனுப்பிவைத்து, “நம் கடவுளான ஆண்டவரிடம் எங்களுக்காக மன்றாடும்” என்று அவரை வேண்டிக்கொண்டான்.
4
அந்நாள்களில் மக்களிடையே எரேமியா தடையின்றி நடமாடிக் கொண்டிருந்தார். ஏனெனில் அவர் இன்னும் சிறையில் அடைக்கப்படவில்லை.