எரேமியா 36:10-12 - WCV
10
அப்பொழுது செயலரான சாப்பானின் மகன் கெமரியாவின் அறையில், அதவாது ஆண்டவர் இல்லத்தின் புதுவாயிலை ஒட்டிய மேல்முற்றத்து அறையில் இருந்தவாறு, மக்கள் எல்லாரும் கேட்கும்படி எரேமியாவின் சொற்களை ஏட்டுச் சுருளினின்று பாரூக்கு படித்துக்காட்டினார்.
11
ஏட்டுச் சுருளினின்று படிக்கப் பெற்ற ஆண்டவரின் சொற்கள் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த சாப்பானின் பேரனும் கெமரியா மகனுமான மிக்காயா,
12
உடனே அரண்மனைக்கு இறங்கிச் சென்று, செயலரின் அறைக்குள் நுழைந்தார். அங்கே செயலராகிய எலிசாமா, செமாயாவின் மகன் தெலாயா, அக்போரின் மகன் எல்னாத்தான், சாப்பானின் மகன் கெமரியா, அனனியாவின் மகன் செதேக்கியா ஆகியோர் உள்படத் தலைவர்கள் அனைவரும் அமர்ந்திருந்தார்கள்.