எரேமியா 34:8-11 - WCV
8
விடுதலையை அறிவிப்பதற்காக, அரசன் செதேக்கியா எருசலேம் மக்கள் அனைவரோடும் உடன்படிக்கை செய்துகொண்டபின், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.
9
யூதா நாட்டினர் எவரும் தம் சகோதரரை அடிமைப்படுத்தாமல், அவரவர் தம் எபிரேய அடிமைகளான ஆண், பெண் அனைவரையும விடுதலை செய்ய வேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கை.
10
உடன்படிக்கை செய்துகொண்ட தலைவர்கள், மக்கள் ஆகிய எல்லாரும், தம் அடிமைகளான ஆண், பெண் அனைவரும் தொடர்ந்து அடிமைகளாய் இராதவாறு, அவர்களுக்கு விடுதலை அளிக்க உடன்பட்டு அவர்களை விடுதலை செய்தார்கள்.
11
ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டார்கள்: தாங்கள் ஏற்கெனவே விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை மீண்டும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.