எரேமியா 31:8-10 - WCV
8
இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்: பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.
9
அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்: ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்: நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்: இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.
10
மக்களினத்தாடரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்: 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.