எரேமியா 31:6-10 - WCV
6
ஏனெனில் ஒரு நாள் வரும்: அப்பொழுது எப்ராயிம் மலையில், 'எழுந்திருங்கள்: நான் சீயோனுக்குப் போவோம்: நம் கடவுளாகிய ஆண்டவரிடம் செல்வோம்' என்று காவலர் அழைப்பு விடுப்பர்.
7
ஆண்டவர் தொடர்ந்து கூறுகிறார்: யாக்கோபை முன்னிட்டு மகிழ்ந்து பாடுங்கள்: மக்களினத் தலைவனைக் குறித்து ஆர்ப்பரியுங்கள்: முழக்கம் செய்யுங்கள், புகழ்பாடுங்கள்: 'ஆண்டவர் இஸ்ரயேலில் எஞ்சியோராகிய தம் மக்களை மீட்டருளினார்!' என்று பறைசாற்றுங்கள்.
8
இதோ! வடக்கு நாட்டிலிருந்து அவர்களை நான் அழைத்து வருவேன்: மண்ணுலகின் கடை எல்லைகளினின்று அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களுள் பார்வையற்றோரும் காலூனமுற்றோரும் கருவுற்றோரும் பேறுகாலப் பெண்டிரும் அடங்குவர்: பெரும் கூட்டமாய் அவர்கள் இங்குத் திரும்பி வருவர்.
9
அழுகையோடு அவர்கள் திரும்பி வருவார்கள்: ஆறுதலளித்து அவர்களை நான் அழைத்து வருவேன்: நீரோடைகள் ஓரமாக அவர்களை நான் நடத்திச் செல்வேன்: இடறிவிழாதவாறு சீரான வழியில் அவர்கள் நடக்கச் செய்வேன். ஏனெனில் நான் இஸ்ரயேலின் தந்தை, எப்ராயிமோ என் தலைப்பிள்ளை.
10
மக்களினத்தாடரே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்: தொலையிலுள்ள கடலோரப் பகுதிகளில் அதை அறிவியுங்கள்: 'இஸ்ரயேலைச் சிதறடித்தவரே அதைக் கூட்டிச் சேர்ப்பார்: ஆயர் தம் மந்தையைக் காப்பதுபோல் அதைக் காப்பார்' என்று சொல்லுங்கள்.