எரேமியா 3:11-14 - WCV
11
ஆண்டவர் என்னிடம் கூறியது: நம்பிக்கையற்ற இஸ்ரயேல் நம்பிக்கைத் துரோகம் செய்த யூதாவைவிட நேர்மையானவள்.
12
நீ சென்று வடக்கே திரும்பி இச்சொற்களை உரக்கக் கூறு: நம்பிக்கையற்ற இஸ்ரயேலே, என்னிடம் திரும்பிவா, என்கிறார் ஆண்டவர். நான் உன்மீது சினம் கொள்ளமாட்டேன்: ஏனெனில், நான் பேரன்பு கொண்டவன், என்கிறார் ஆண்டவர். நான் என்றென்றும் சினம் கொள்ளேன்.
13
உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும்: உன் கடவுளாகிய ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்தாய்: பசுமையான மரங்கள் அனைத்தின் கீழும் அன்னியரை நாடி அங்குமிங்கும் ஓடினாய்: என் குரலுக்கோ நீ செவிசாய்க்கவில்லை, என்கிறார் ஆண்டவர்.
14
மக்களே! என்னிடம் திரும்பி வாருங்கள்: ஏனெனில், நானே உங்கள் தலைவன்: நகருக்கு ஒருவனையும் குடும்பத்திற்கு இருவரையுமாகத் தெரிந்தெடுத்து உங்களைச் சீயோனுக்குக் கூட்டி வருவேன்.