11
இந்நாடு முற்றிலும் அழிந்து பாழ்நிலமாகும். சுற்றியுள்ள நாடுகளும் எழுபது ஆண்டளவாய்ப் பாபிலோனிய மன்னனுக்கு அடிமையாகும்.
12
ஆனால் எழுபது ஆண்டுகள் முடிந்தபின் பாபிலோனிய மன்னனையும் அந்த நாட்டையும் தண்டிப்பேன், என்கிறார் ஆண்டவர். அவர்களது குற்றத்தின் காரணமாகக் கல்தேயரின் நாட்டை என்றென்றைக்கும் பாழ்நிலம் ஆக்குவேன்.
13
நான் அந்த நாட்டுக்கு எதிராய்ப் பேசியுள்ள அனைத்துச் சொற்களும், எரேமியா வேற்று நாடுக்கு எதிராய் உரைத்து இந்நூலில் எழுதப்பட்டுள்ள அனைத்து இறைவாக்குகளும் அந்நாட்டின் மேல் பலிக்கச் செய்வேன்.
14
அந்நாட்டினரைக் கூடப் பல நாடுகளும் மாமன்னர்களும், அடிமையாக்குவர். அவர்களின் செயல்களுக்கும் நடத்தைக்கும் ஏற்றவாறு நான் அவர்களுக்குக் கைம்மாறு அளிப்பேன்.