13
நீதியின்றித் தன் மாளிகையையும், நேர்மையின்றித் தன் மாடியறைகளையும் கட்டுகின்றவனுக்கு ஐயோ கேடு! அடுத்திருப்பாரை ஊதியமின்றி உழைக்கச் செய்கிறான். அவருக்குக் கூலி கொடுப்பதில்லை.
14
“நான் பெரியதொரு மாளிகையையும் காற்றோட்டமான மாடியறைகளையும் கட்டிக்கொள்வேன்” என்கிறான். அதற்குப் பலகணிகளை அமைத்துக் கொள்கின்றான். கேதுரு பலகைகளால் அதனை அணி செய்து அதற்குச் செவ்வண்ணம் தீட்டுகின்றான்.
15
கேதுரு மரங்களின் சிறப்பில்தான் உன் அரச பெருமை அடங்கியிருக்கின்றதா? உன் தந்தை உண்டு குடித்து மகிழ்ந்தாலும், நீதி நேர்மையுடன் நடந்தானே! அவனைப் பொறுத்தவரையில் எல்லாம் நலமாய் இருந்ததே!
16
ஏழை எளியோரின் வழக்கில் அவன் நீதி வழங்கினான். எல்லாம் நலமாய் இருந்தது. என்னை அறிதல் என்பது இதுதானே! என்கிறார் ஆண்டவர்.
17
நீயோ நேர்மையின்றி வருவாய் சேர்ப்பிலும் மாசற்ற இரத்தத்தைச் சிந்துவதிலும் ஒடுக்கித் துன்புறுத்துவதிலும்தான் கண்ணும் கருத்துமாய் இருக்கிறாய்.