எரேமியா 14:2-6 - WCV
2
யூதா துயருற்றுள்ளது: அதன் வாயில்கள் சோர்வுற்றுள்ளன: அதன் மக்கள் தரையில் விழுந்து புலம்புகின்றார்கள்: எருசலேமின் அழுகைக் குரல் எழும்பியுள்ளது.
3
உயர்குடி மக்கள் தம் ஊழியரைத் தண்ணீர் எடுக்க அனுப்புகின்றார்கள்: அவர்கள் நீர்த்தேக்கங்களுக்குச் செல்கின்றார்கள்: அங்குத் தண்ணீர் இல்லை: அவர்கள் வெறுங்குடங்களோடு திரும்பி வருகின்றார்கள்: வெட்கி நாணித் தங்கள் தலைகளை மூடிக்கொள்கின்றார்கள்.
4
நாட்டில் மழை இல்லாததால் தரை வெடிப்புற்றுள்ளது. உழவர்கள் வெட்கித் தங்கள் தலைகளை மூடிக் கொள்கின்றார்கள்:
5
கன்று ஈன்ற வயல்வெளிப் பெண்மான் புல் இல்லாமையால் தன் கன்றை விட்டுவிட்டு ஓடிப்போகும்.
6
காட்டுக் கழுதைகள் மொட்டை மேடுகள்மேல் நிற்கின்றன: காற்று இல்லாமையால், குள்ள நரிகளைப் போல் மூச்சுத் திணறுகின்றன: பசுமையே காணாததால் அவற்றின் பார்வை மங்கிப் போயிற்று,