19
நீர் யூதாவை முற்றிலும் புறக்கணித்துவிட்டீரா? சீயோனை உம் உள்ளம் வெறுத்து விட்டதா? நாங்கள் குணமாக முடியாதபடி ஏன் எங்களை நொறுக்கினீர்? நாங்கள் அமைதிக்காகக் காத்திருந்தோம்: பயனேதும் இல்லை! நலம்பெறும் காலத்தை எதிர்பார்த்திருந்தோம்: பேரச்சமே மிஞ்சியது!
20
ஆண்டவரே! எங்கள் குற்றத்தையும் எங்கள் மூதாதையரின் தீமையையும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்: நாங்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்தோம்.
21
உம் பெயரை முன்னிட்டு எங்களை உதறித் தள்ளாதீர்: உம் மாட்சிமிகு அரியணையை அவமதிக்காதீர்: நீ எங்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுகூரும்: அதனை முறித்து விடாதீர்.